இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐஎஸ்: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

ஐ.எஸ்.ஐ.எஸ் கோரசன் குழு கடந்த ஆண்டு இந்தியாவில் தற்கொலைத் தாக்குதலுக்கு முயன்றது என அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதியின் மரணத்திற்குப் பிறகு அமெரிக்கா ஒரு பெரிய தகவலை வெளியிட்டுள்ளது.

தெற்காசியாவில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே எனப்படும் கோரசன் குழு கடந்த ஆண்டு இந்தியாவில் தற்கொலைத் தாக்குதலுக்கு முயன்றது. ஆனால் அது தோல்வியடைந்தது என அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் புதன்கிழமையன்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

2015 இல் உருவாக்கப்பட்ட பயங்கரவாத இஸ்லாமியக் குழுவின் இந்த பிரிவு பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் இயங்குகிறது. ஆனால் இப்போது தெற்காசியாவின் பிற பகுதிகளுக்கும் கிளைக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

"ஐ.எஸ்.ஐ.எஸின் அனைத்து கிளைகளிலும் நெட்வொர்க்குகளிலும், ஐ.எஸ்.ஐ.எஸ்-கே மிகவும் அக்கறை கொண்ட ஒன்றாகும். அநேகமாக 4,000 நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்கலாம்" என்று அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் செயல் இயக்குநரும், தேசிய புலனாய்வு இயக்குநருமான ரஸ்ஸல் டிராவர்ஸ் கூறியுள்ளார்.

கோரசன் பிரிவு சில ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கைத் தாக்க முயன்று, தோல்வியுற்றது. பின்னர் அவர்கள் 2017 இல் ஸ்டாக்ஹோமைத் தாக்கி, ஐந்து பேரைக் கொன்றனர் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்