வகுப்பறையில் நடந்த மோசமான சம்பவம்: ஆசிரியை நீக்கம், மாணவன் கைது!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஆசிரியையும் மாணவர் ஒருவரும் வகுப்பறையிலேயே முரட்டுத்தனமாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Louisvilleஇல் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் நடந்த இந்த மோசமான சம்பவத்தை, மற்றொரு மாணவர் வீடியோ எடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒட்டினாற்போல் ஒரு மாணவரும் ஆசிரியை ஒருவரும் நிற்க, ஆசிரியை ஏதோ சொல்கிறார்.

உடனே Kamron Jennings என்னும் அந்த மாணவன், அந்த ஆசிரியையின் மார்பில் கைவைத்து அவரைத் தள்ளுகிறான்.

பதிலுக்கு Carrie Durham Adams என்னும் அந்த ஆசிரியையும் அந்த மாணவனைப் பிடித்துத் தள்ளியதில், அந்த மாணவன் கீழே போய் படாரென்று விழுகிறான்.

கோபமடைந்த அந்த மாணவன் ஆசிரியையை அடிக்க, சட்டென தனது ஓவர் கோட்டைக் கழற்றும் ஆசிரியை, மீண்டும் அந்த மாணவனை அடிக்கப் பாய்கிறார்.

ரவுடிகள் போல வகுப்பறையில் உக்கிரமாக தாக்கிக்கொள்ளும் இருவரையும் கண்டு பயந்து அலறியவாறு மற்ற மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியே ஓடுகிறார்கள். மிக மோசமான அந்த தாக்குதலையடுத்து Jennings கைது செய்யப்பட்டுள்ளான். தாக்கியதாக அவன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. Carrie வகுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

என் மேலே கையை வைத்துப்பார், உன்னைக் கண்டு எனக்கென்ன பயமா? என்று Carrie கேட்டதாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்துதான் இந்த சண்டை தொடங்கியுள்ளது. Carrie மீது விசாரணை நடந்து வருகிறது, ஆனால் இதுவரை குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வீடியோ, அமெரிக்காவின் கல்வியின் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது எனலாம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்