மனைவியை கொன்று சடலத்தை பிரிட்ஜில் வாரக்கணக்கில் ஒளித்து வைத்த கணவன்... சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் மனைவியை கொலை செய்து உடலை சில வாரங்கள் பிரிட்ஜில் வைத்திருந்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெக்ஸாஸை சேர்ந்தவர் பேட்ரிக் லம்பெர்ட். இவர் மனைவி அனஸ்திகா.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி அன்ஸ்திகாவுடன் சண்டையிட்ட பின்னர் 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பேட்ரிக் சடலத்தை வீட்டில் இருந்த பிரிட்ஜில் மறைத்து வைத்தார்.

சில வாரங்கள் அங்கேயே சடலம் கிடந்த நிலையில் பின்னர் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பிரிட்ஜிலும் மின்சாரம் இல்லாததால் அங்கிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் பேட்ரிக் மெக்சிகோவுக்கு தனது கை குழந்தையுடன் தப்பி சென்றுவிட்டார்.

அங்கு குழந்தையை அனாதையாக தவிக்க விட்டு வேறு இடத்தில் சென்று ஒளிந்து கொண்டார்.

இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று பத்து நிமிடத்தில் பேட்ரிக் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்