பிரசவத்திற்கு பின்னர் கடந்த காலம் அத்தனையும் மறந்த இளம் தாயார்: கணவர் செய்த உருக வைக்கும் செயல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் பிரசவத்தின் போது ஏற்பட்ட வலிப்பு நோயால் கடந்த காலம் அத்தனையும் மறந்த இளம் தாயாருக்கு அவரது கணவர் செய்த செயல் திரைப்படத்தை விஞ்சியதாக அமைந்துள்ளது.

அமெரிக்கரான 38 வயது Steve Curto தமது நான்காவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் வகையில் மனைவிக்கு பரிசளித்த புத்தகமே சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.

முதல் முறை தாயாராகும் Camre-கு பிரசவத்தின் போது எதிர்பாராதவிதமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

இது அவரை மருத்துவ ரீதியான கோமாவுக்கு இட்டுச் சென்றது. அதில் இருந்து கண் விழித்த அவருக்கு அதன் பின்னர் எதுவும் நினைவில் இல்லை.

தமது கணவர் ஸ்டீவ் அல்லது புதிதாக பிறந்த காவின் என யாரையும் Camre-கு நினைவில் இல்லை.

இதனைத் தொடர்ந்து பெற்றோரின் ஆலோசனைப்படி Camre அவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் மீண்டும் தமது கணவருடன் இணைந்து வாழ்ந்து வரும் Camre கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்தவற்றை தமது கணவர் தொகுத்துள்ள புத்தகத்தை வாசித்து வருகிறார்.

Credit: Steve Curto

Camre பிரசவத்திற்கு பின்னரான அனைத்து சிகிச்சையில் இருந்து மீண்டு, கணவருடன் குடியிருப்புக்கு திரும்பிய சில நாட்களில் ஒருநாள்,

தமது கணவரை பார்த்து Camre கூறியுள்ளார், உங்களை யார் என்று உண்மையில் எனக்கு தெரியவில்லை, ஆனால் உங்களை காதலிப்பதாக மட்டும் எனது உணர்வு சொல்கிறது என கூறியுள்ளார்.

அதுவே ஸ்டீவுக்கு இந்த புத்தகத்தை எழுதும் தூண்டுதல் ஏற்பட்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். Camre 33 வார கர்ப்பிணியாக இருக்கும் போது திடீரென்று மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Credit: Steve Curto

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரது நிலை மேலும் சிக்கலாக மாறியுள்ளது.

இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். வெறும் நான்கு பவுண்டு எடையுடன் பிறந்த குழந்தை காவின் சுமார் 36 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார்.

இதனிடையே பிரசவத்தின் போது வலிப்பு நோய் ஏற்பட, Camre-வின் இருபக்க மூளையும் பாதிக்கப்பட்டது. இதனால் அவரது நினைவுத்திறன் மொத்தமாக பாதிக்கப்பட்டது.

Credit: Camre Curto

கோமாவில் இருந்து எழுந்த Camre தாம் எங்கே இருக்கிறோம், தமது அருகே இருக்கும் அந்த நபர் யார் என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.

இச்சம்பவம் நடந்து தற்போது 7 ஆண்டுகள் ஆன நிலையில் Camre மெதுவாக தமது மகனையும் கணவரையும் அடையாளம் கண்டு வருவதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, அன்றாடம் நடப்பவைகள், செய்ய வேண்டியவை என அனைத்தையும் Camre குறித்து வைத்துக் கொள்வதாகவும், தமது கணவர் பரிசளைத்த புத்தகத்தை வாசிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார் Camre.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்