வீட்டின் மீது விழுந்து தீப்பிடித்த விமானம்: விமானியின் நிலைமை தெரியவில்லை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து தீப்பற்றியதில் அருகருகே இருந்த இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் யாரும் இல்லை என்றாலும், அந்த விமானத்தின் விமானி என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

எட்டு பேர் பயணிக்கும் அந்த Cessna 414 ரக விமானத்தில் ஒரு விமானி மட்டும் இருந்துள்ளார்.

நியூ ஜெர்ஸியிலுள்ள Colonia என்ற இடத்தில் அந்த விமானம் விழுந்துள்ளது. விமானம் விழுந்ததில் தீப்பிடித்து எரியும் வீட்டின் படங்களும், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Virginiaவிலுள்ள Leesburg என்ற இடத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம், Linden விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்திருக்கிறது.

ஆனால் Lindenஐ அடையும் முன்பே விழுந்து தீப்பற்றியுள்ளது.

எதனால் இந்த விபத்து நேரிட்டது என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்