தாயை கொலை செய்துவிட்டு நேரலையில் ஒளிபரப்பு செய்த இளைஞர்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

இளைஞர் ஒருவர் தனது தாயை கொன்றுவிட்டு அதற்கு பிந்தைய நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பியுள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Utah மாகாணத்தைச் சேர்ந்த Jeffrey Antonio Langford (24) தனது தாயை கொலை செய்துவிட்டு தொடர்ந்து நேரலை வீடியோக்களை ஒளிபரப்பியுள்ளது தெரியவந்தது.

Graciela Holker (45) என்ற பெண் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, சமூக ஊடகம் ஒன்றில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த ஒரு இளைஞர், தானும் தன்னையே சுட்டு தற்கொலை செய்துகொள்ள இருப்பதாக கூறியதாகவும் செய்தி கிடைத்துள்ளது.

பின்னர் வெளியான சில நேரலை வீடியோக்களில் ஒன்றில், முகமெல்லாம் இரத்தமாக காணப்பட்ட Jeffrey என்பவர், கமெராவைப் பார்த்து, தன் தாய் முகத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் இறக்கவில்லை என்றும், அதனால், தான் தன் தாயின் துன்பத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ‘வேலையை முடிக்கப்போவதாகவும்’ கூறியுள்ளார்.

மற்றொரு வீடியோவில், Graciela இறந்து கிடப்பதும், நான் ஜெயிலுக்கு போகமாட்டேன் என Jeffrey அழுவதும் தெரிகிறது.

Jeffreyயை விசாரித்தபோது, தனது தாய் கத்தியால் தொண்டையை அறுத்துக்கொண்டதாகவும், பின்னர் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர், அம்மாவுக்கு வலிக்கவோ, அவர் நடைபிணமாகவோ ஆகி கஷ்டப்படவோ கூடாது என்பதற்காக, தான் அவரை சுட்டுக்கொன்றுவிட்டேன் என்று அவர் கூறினார். அவர் போதையிலிருந்ததும் பின்னர் தெரியவந்தது.

Jeffrey இப்படி மாறி மாறி உளறிய நிலையில், வீடியோவுக்குப்பின், தான் தனது தாயை சுட்டுக்கொன்றுவிட்டதை இறுதியாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட Jeffrey மீது, கொலை, நீதிக்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் போதையில் இருக்கும்போது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர ஆயுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்