ஹாலோவீன் கொண்டாட்டத்தில் சரமாரி துாப்பாக்கிச் சூடு தாக்குதல்: 3 பேர் பலி.. 5 பேர் உயிருக்கு போராட்டம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது நடத்திய துாப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Long Beach நகரத்தில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்திலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Long Beach நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் சரமாரி துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல் கிடைத்தது அடுத்து சம்பவயிடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர்.

வீட்டிற்குள் பொலிசார் நடத்திய சோதனையின் போது வீட்டின் பின்னால் மூன்று பேர் கொல்லப்பட்டு கிடந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து மேலும், காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முக்காடு அணிந்த இருவர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கான நோக்கம், எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டார்கள், வாகனத்தில் வந்தார்களா என்பது குறித்த எந்த தகவலும் தற்போது வரை பொலிசார் வெளியிடவில்லை.

இரவு 10:45 மணிக்கு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சுமார் 30 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அக்கம் பகத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து பொலிசார் சம்பவயிடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்