22 ஆண்டுகள் சிறை.. மரண தண்டனைக்கு முன் கொலையாளி சாப்பிட விரும்பிய உணவு: சகோதரியின் பாசப்போராட்டம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் மரண் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கொலையாளி ஆடம்பரமான கடைசி உணவைக் கோரியுள்ளார்.

ஏப்ரல் 1994ல் ஜார்ஜியாவின் தாமஸ்வில்லில் நடந்த கொள்ளையின் போது Slyz என்ற கடைகாரரை கொன்ற வழக்கில் Cromartie குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.

அவரும் ஒரு கூட்டாளியும் பணப் பெட்டியை திறக்க முடியவில்லை என்றும், Slyz-ஐ தலையில் இரண்டு முறை சுட்டுக் கொன்ற பிறகு இரண்டு பீரை திருடியதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

Slyz-ஐ கொலை செய்யப்பட்டதற்காக 30 வயதான Cromartie-க்கு 1997 ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 52 வயதான Cromartie, 22 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு அக்டோபர் 30ம் திகதி இரவு 7 மணிக்கு விச ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

அவரது உடம்பில் மருந்துகள் செலுத்தப்படுவதற்கு முன்பு, Cromartie 11 பொருட்களைக் கொண்ட ஒரு ஆடம்பரமான கடைசி உணவை சாப்பிட ஆசை என கோரியுள்ளார்.

அமெரிக்காவின் பல மாநிலங்கள் கைதியின் கடைசி உணவுக்கு குறிப்பிட்ட அளவிலே நிதி வழங்கப்படுகிறது, ஆனால் ஜார்ஜியா திருத்தத் துறை கடந்த காலங்களில் ஆடம்பர கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது.

(Image: Georgia Department of Corrections)

Slyz-ஐ சுட்டுக்கொள்வதை தொடர்ந்து மறுத்து வந்த கொலைகாரன் Cromartie, ஒரு ஸ்டீக், இரால், மாக்கரோனி மற்றும் சீஸ், கியூப் ஸ்டீக், சாப்பாடு மற்றும் கிரேவி, ஸ்டீக் மற்றும் சீஸ் சாண்ட்விச், இரட்டை சீஸ் பர்கர், பொரியல், a side of ranch dressing, ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் மற்றும் கேக் ஐசிங் சாப்பிட கோரியுள்ளார்.

Cromartie-ன் மரணதண்டனை ஒத்திவைப்பது குறித்து விவாதிக்க மன்னிப்பு மற்றும் பரோல்ஸ் வாரியம் செவ்வாய்க்கிழமை கூடுகிறது.

யாராக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என Cromartie சகோதரி கரோல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்