வகுப்பறையில் திடீரென துப்பாக்கி எடுத்த மாணவன்.. உயிர் பயத்தில் தெறித்து ஓடிய மாணவர்கள்: வெளியான சிசிடிவி காட்சி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் பள்ளி வகுப்பறையில் துப்பாக்கியால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிகானின் போர்ட்லேண்டில் உள்ள பார்க்ரோஸ் உயர்நிலைப்பள்ளியில் மே-17ம் திகதி இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது, மாணவன் காப்பாற்றப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

19 வயதான மாணவன் Scorned Granados-Diaz வகுப்பறையில் திடீரென துப்பாக்கியை எடுத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெறித்து ஓடியுள்ளனர்.

எனினும், கால்பந்து பயிற்சியாளரான 27 வயதுடைய Keanon Lowe, மாணவனிடம் பாசமாக பேசி கட்டியணைத்து துப்பாக்கியை வாங்கி காப்பற்றியுள்ளார். பின்னர், சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசாரிடம் Diaz ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட Diaz, தனது தாயை பழிவாங்கும் நோக்கத்தோட இந்த முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Diaz-க்கு 36 மாத தகுதிகாண் தண்டனை வழங்கப்பட்டது மற்றும் மனநல சிகிச்சைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்