தீவிரவாதிகளுடன் நடக்கும் இறுதிகட்ட சண்டை... டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.

இது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இதற்கு முன்னதாக, குர்து படைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது என்று துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்து வந்தார்.

மேலும் எல்லைப் பகுதியில் தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளை அழிப்பதற்காக துருக்கி ராணுவ நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்றும் இது தொடர்பான பணிக்குத் தயாராகி வருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம் வடக்கு பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

அதில், சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக துருக்கி நடத்தும் ராணுவத் தாக்குதலைக் கருத்தில் கொண்டு வடக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி மாகாணமான இட்லிப்பிற்கு இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers