கருத்தரித்த மனைவி! வயிறு வீங்கி கர்ப்பிணி போல மாறிய கணவன்... வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கர்ப்பமாக இருந்த மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவருக்கு பதிலாக மகப்பேறு போட்டோ ஷூட் நடத்திய கணவரின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

ஜாரிட் ப்ரீவர் என்ற நபருக்கு கெல்சி என்ற பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இதையடுத்து கெல்சி கர்ப்பமடைந்தார், குழந்தை பிரசவிக்கும் சில வாரங்களுக்கு முன்னர் மகப்பேறு போட்டோஷீட் நடத்தவேண்டும் என கெல்சி ஆசைப்பட்டார்.

ஆனால் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதோடு குறித்த திகதிக்கு ஆறு வாரங்களுக்கு முன்னரே கடந்த 28ஆம் திகதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் தனது போட்டோ ஷூட் கனவு நிறைவேறவில்லை என அவர் வருத்தமடைந்தார்.

இதை புரிந்து கொண்ட அவர் கணவர் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அருவியின் பக்கம் நின்று தனது வயிற்றை காட்டி கர்ப்பிணி பெண் போல பல வித கோணங்களில் போட்டோ ஷூட் நடத்தினார்.

இந்த புகைப்படங்களை மனைவியிடம் காட்டிய போது அவருக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது.

இது குறித்து கெல்சி கூறுகையில், இது போன்ற ஒரு விடயத்தை என் கணவர் செய்வார் என நான் நினைக்கவில்லை, இதற்கெல்லாம் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு தான் காரணம் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்