விமானத்திலிருந்து கழன்று பறந்த கூரை... அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு - வீடியோ

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்க விமானத்தில் கூரை கழன்று காற்றி பறந்த நிலையில், அந்த விமானத்தை விமானி சாதுரியமாக செயல்பட்டு தரையிறக்கியுள்ளார்.

United airline-க்கு சொந்த விமானம் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் இருந்து புளோரிடாவின் ஆர்லண்டோ நகருக்கு 196 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.

பாதி வழியில் சென்றபோது விமானத்தின் வலதுபுற என்ஜினின் மேற்கூரை கழன்று ஆட்டம் கண்டதை பயணி ஒருவர் கவனித்துள்ளார்.

உடனே அவர் பணிப்பெண் மூலம் விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டென்வர் நகருக்கு திருப்பிய விமானி சாதுரியமாக செயல்பட்டு, விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

அந்த விமானத்தில் பயணித்த Bobby Lewis என்பவர் கூரை கழன்று ஆடும் காட்சியை தனது phone-ல் பதிவு செய்துள்ளார்.

அந்த விமானம் தொடர்ந்து பறந்திருந்தால் தீப்பற்றி எரிந்திருக்கும் என்று விமான தொழில்நுட்பபிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணியின் கவனம் 196 உயிர்களை காத்ததாக பலர் தங்களது கருத்தாக வெளியிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்