சிங்கத்தின் குகைக்குள் குதித்து... இரையாகவிருந்த பெண் செய்த செயல்: பீதியில் உறைந்த சுற்றுலா பயணிகள்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்கா உயிரியல் பூங்காவில் பெண் ஒருவர் பாதுகாப்பு எல்லையை தாண்டி சிங்கத்திற்கு அருகே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள Bronx உயிரியல் பூங்காவிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிகழ்வை சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், உயிரியல் பூங்காவின் பாதுகாப்பு எல்லையை தாண்டி சென்ற பெண் ஒருவர், ஆண் சிங்கத்திற்கு முன் நின்று நடனமாடி வெறுப்பேற்றுகிறார். சிங்கத்திற்கும் அப்பெண்ணிற்கும் இடையில் பள்ளம் மட்டுமே இருந்துள்ளது.

எனினும், அப்பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்த சிங்கம் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளது, பின்னர், அப்பெண் பத்திரமாக திரும்பியுள்ளார்.

இந்த காட்சியை கண்ட அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். குறித்த பெண் யார் என தற்போது வரை அடையாளம் காணப்படவில்லை.

இச்சம்பவத்தை உறுதி செய்த உயிரியல் பூங்கா நிர்வாகம், இந்த நடவடிக்கை கடுமையான மற்றும் சட்டவிரோதமான அத்துமீறில், இது கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியது.

மேலும், அத்துமீறிய பெண் மீது உயிரியல் பூங்கா தரப்பில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்