அமெரிக்கா முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆபத்தில் உள்ளது... ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை வீடியோ

Report Print Basu in அமெரிக்கா
118Shares

தன் மீது அதிகார துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையை விமர்சித்த அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், நாடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆபத்தில் உள்ளதாக தனது ஆதரவாளர்களை எச்சரித்துள்ளார்.

டிரம்ப் தனது ஜனாதிபதி அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் மற்றும் தற்போதைய ஜனநாயகக் கட்சியின் முன்னணியில் உள்ள முன்னாள் துணை ஜனாதிபதி Joe Biden-ஐ மதிப்பை குறைப்பதற்கும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தனது உதவவுவதற்கும், வெளிநாட்டு அரசாங்கத்திடம் உதவி கோரியிருக்கலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் செவ்வாயன்று டிரம்பின் மீதான விசராணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து ட்விட்டரில் டிரம்ப் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, அமெரிக்க உரிமைகள் ஜனநாயகக் கட்சியினரால் அச்சுறுத்தப்படுகின்றன, அவர்கள் உங்கள் துப்பாக்கிகளை, உடல்நலப் பாதுகாப்பை, வாக்குகளை, சுதந்திரத்தை பறிக்க விரும்புகிறார்கள் என்று கூறினார்.

நாங்கள் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால், நம் நாடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆபத்தில் உள்ளது என்று அவர் கூறினார்.

இவை அனைத்தும் மிகவும் எளிமையானவை. நான் உங்களுக்காகப் போராடுவதால் அவர்கள் என்னைத் தடுக்க முயற்சிக்கிறார்கள், நான் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

தனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த டிரம்ப் அடுத்தடுத்த ட்விட்டுகளில், குற்றச்சாட்டு விசாரணை ஒரு "Witch Hunt garbage" என்று கூறினார், மேலும் குற்றச்சாட்டு விசாரணைக்கு தலைமை தாங்கும் ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர் Adam Schiff, தன்னை அவதூறு செய்து விடுவித்ததாகவும், காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இந்த வாரம் வெளியிடப்பட்ட டிரம்ப்-உக்ரைன் தொலைபேசி அழைப்பும் இந்த புகாரின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்