6வயது சிறுமி ஆசிரியரிடம் அடம்பிடித்து தாக்க முற்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிகாவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இச்சம்வம் நடைபெற்றுள்ளது.
ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லோண்டோ பகுதியில் உள்ளது லூசியஸ் அண்டு எம்மா நிக்சன் பள்ளி. இங்கு படிக்கும் சிறுமியான காயா ரோல், பள்ளியில் அடம்பிடித்து ஆசிரியரை உதைத்துள்ளார்.
இதன் பொருட்டு பள்ளி பாதுகாப்பு மற்றும் குற்ற செயல் தடுப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள காவலர் அவரை கைது செய்து கையை கட்டி வாகனத்தில் ஏற்றி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கொண்டு சென்றுள்ளார்.
மேலும், அவரை குற்றவாளி என்ற பெயர் பலகையை தாங்கி நிற்கும் பலகையுடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.
பின் இத்தகவலை சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு விரைந்த பெற்றோர், இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்ததாகவும், குழந்தையை இப்படி நடத்தியது குறித்து வேதனையையும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்வம் குறித்து காவல்துறை அதிகாரி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
