விமானத்தில் பயணிகள் முன்னிலையில் உள்ளாடையோடு நிற்கவைக்கப்பட்ட இளம்பெண்... நடந்தது என்ன?

Report Print Raju Raju in அமெரிக்கா
371Shares

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் இளம் பெண்ணும் பாடகியுமான Aubrey O'Day தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Aubrey விமானத்தில் சென்று கொண்டிருந்த போது ஆபாசமான வார்த்தை பொறிக்கப்பட்டிருந்த சட்டையை அணிந்திருந்தார்.

இதையடுத்து விமானத்தில் இருந்த ஆண் உதவியாளர் அவரிடம் வந்து ஆபாசமான வார்த்தை கொண்ட இந்த சட்டையை அணியக்கூடாது என கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அனைவர் முன்னிலையிலும் என்னை சட்டையை கழட்ட சொன்னதால் தான் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்த பெண் பயணி தன்னிடம் இருந்த உடையை தனக்கு தந்து உதவியதாகவும், தன்னை அவமானப்படுத்திய ஆண் விமான ஊழியர் மீது விமான நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டுவிட்டரில் Aubrey தெரிவித்தார்.

இதற்கு டுவிட்டரில் Aubrey-க்கு பதிலளித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இது தொடர்பாக நாங்கள் விசாரிப்போம், நீங்கள் பயணித்த விமானம் தொடர்பான தகவலை கொடுங்கள் என Aubreyவிடம் கேட்டதற்கு, நான் தான் விமான ஊழியரின் பெயரை கூறிவிட்டேனே. மேலும் இது தொடர்பாக பேச விரும்பவில்லை என காட்டமாக தெரிவித்தார்.

இதனிடையில் Aubrey வுடன் பயணித்த பயணிகள் அவர் செய்த செயல் குறித்து வேறு விதமாக கூறினார்கள்.

அதாவது, விமான ஊழியர் Aubreyவிடம் வந்து உங்கள் உடையை மாற்ற முடியுமா என கேட்டார்.ஆனால் தன்னால் மாற்ற முடியாது என Aubrey கூறினார்.

இதையடுத்து சட்டையில் ஆபாச வார்த்தை உள்ள பகுதியை திருப்பி போடுமாறு ஊழியர் கூற, கழிப்பறைக்கு சென்று உடையை மாற்றாத Aubrey வேண்டுமென்றே எல்லா பயணிகள் முன்னிலையிலும் உடையை கழட்டினார் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் எந்தவொரு விளக்கமும் இன்னும் அளிக்கவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்