அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சந்தேகத்தின் பேரில் மனைவி மற்றும் வளர்ப்பு பிள்ளைகளை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் குடியிருந்த தற்போது 45 வயதாகும் ராபர்ட் ஸ்பார்க்ஸ் தமக்கு உளவியல் பிரச்னை இருப்பதாக கூறி மரண தண்டனையில் இருந்து விடுவிக்க கோரியதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்திருந்தது.
டெக்சாஸ் மாகாணத்தை பொறுத்தமட்டில் இந்த ஆண்டு நிறைவேற்றப்படும் 7-வது மரண தண்டனை இதுவாகும். ஒட்டுமொத்த அமெரிக்காவில் இது 16-வது என கூறப்படுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் தூக்கத்தில் இருந்த மனைவி Chare Agnew-ஐ படுக்கையில் வைத்து 18 முறை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் ஸ்பார்க்ஸ்.
பின்னர் தமது 10 மற்றும் 9 வயதுடைய பிள்ளைகள் இருவரையும் எழுப்பி தனித்தனியாக சமையல் அறைக்கு கொண்டு சென்று தலா 45 முறை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து வளர்ப்பு மகள்கள் 12 மற்றும் 14 வயதுடைய இருவரையும் ஒவ்வொருவராக தூக்கத்தில் இருந்து எழுப்பி தமது அறைக்கு கோண்டு சென்று கயிறால் பிணைத்து பின்னர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளார்.
தொடர்ந்து அந்த பிள்ளைகளிடம், தாயார் தமக்கு உணவில் விஷம் வைத்து கொல்லப் பார்த்ததாக கூறியுள்ளார்.
இருவரையும் ஒரு அறைக்குள் பூட்டி விட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார். பின்னர் பொலிசாரை அழைத்து தாம் கொலை செய்துள்ளதாக தகவல் அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு பின்னர் டல்லாஸ் நகருக்கு திரும்பிய ஸ்பார்க்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் அவருக்கு விஷ மருந்து அளித்து மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றும் முன்னர் தமது குடும்பத்தாரை பெயர் குறிப்பிட்டு, அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார் ஸ்பார்க்ஸ்.