குழந்தையை காப்பகத்தில் விட்டிருந்த பெண்: கமெராவில் கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
2678Shares

சிறந்த காப்பகம் என பெயர் பெற்ற, பகல் நேர குழந்தைகள் காப்பகம் ஒன்றில் தனது குழந்தையை விட்டிருந்த பெண் ஒருவர் கமெராவில் தனது குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஓக்லஹாமாவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர், தனது குழந்தையை குழந்தைகள் பகல் நேர காப்பகம் ஒன்றில் விட்டு விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

இரவு வீட்டுக்கு குழந்தையை அழைத்து வந்தபின், அந்த குழந்தை மிகவும் பசியுடன் இருப்பதை அவர் கண்டுள்ளதோடு, குழந்தை இரவில் தூக்கத்தில் திடீரென பயந்து அலறி விழிப்பதையும் கவனித்திருக்கிறார்.

அந்த காப்பகத்தில் நடப்பதை, காப்பகத்தில் பொருத்தப்பட்டு, தங்களது மொபைல் போனுடன் இணைக்கப்பட்டுள்ள கமெரா மூலம் குழந்தைகளின் பெற்றோர் காணும் வசதி உள்ளது.

எனவே சந்தேகத்தின்பேரில் ஒருநாள் தனது குழந்தைக்கு என்ன நடக்கிறது என்பதை மொபைல் போன் மூலம் கண்காணித்திருக்கிறார் அவர்.

அப்போது தனது குழந்தையை கவனித்துக்கொள்ளும் பெண், குழந்தையை தூங்க வைக்க முயல்வதை கவனித்திருக்கிறார் அவர்.

அப்போது கவிழ்ந்து படுத்திருந்த அந்த குழந்தை தனது தலையை தூக்க, சட்டென அந்த பெண், குழந்தையின் தலையைப் பிடித்து தலையணையில் வைத்து அழுத்தியிருக்கிறார்.

பின் எதுவும் நடவாததுபோல், மீண்டும் குழந்தையை தட்டி தூங்க வைக்க முயல்வதுபோல் முதுகில் தட்டியிருக்கிறார்.

அவர் குழந்தையின் தலையைப் பிடித்து தலையணையில் வைத்து அழுத்துவதை வெளியாகியுள்ள வீடியோவில் நன்றாக காண முடிகிறது.

அதிர்ந்துபோன அந்த தாய், உடனடியாக காப்பகத்திற்கு சென்று அந்த வீடியோவை காப்பக உரிமையாளரிடம் காட்டியிருக்கிறார்.

உடனே காப்பக உரிமையாளர், தான் அந்த பெண்ணை வேலையை விட்டு அகற்றுவதாக கூறியுள்ளார்.

பின்னர் அந்த குழந்தையின் தாய், மீண்டும் தனது மொபைலை சோதித்தபோது, காப்பக உரிமையாளர் அந்த பெண்ணை வேலையை விட்டு நீக்கியதாக பொய் சொல்லியிருப்பதும், அந்த பெண் அங்கேயேதான் தொடர்ந்து வேலை பார்ப்பதும் தெரியவந்துள்ளது.

பொலிசாரிடம் வீடியோவை காட்டி புகாரளித்துள்ள அந்த குழந்தையின் தாய், தற்போது குழந்தையை வேறு காப்பகத்திற்கு மாற்றிவிட்டார்.

இதற்கிடையில், இந்த செய்தியை பற்றி விசாரிக்க சென்ற நிருபர்களை அந்த காப்பக உரிமையாளர் வெளியே போ என்று கூறியதோடு, பொலிசாரை அழைப்பேன் என்றும் மிரட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்