சாம்சுங் நிறுவனம் நீண்ட இழுபறிக்கு பின்னர் தனது மடிக்கக்கூடிய கைப்பேசியான Galaxy Fold இனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
எனினும் இக் கைப்பேசி முதன் முறையாக தென்கொரியாவிலேயே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்படுகின்றது.
எனவே வாடிக்கையாளர்கள் இக் கைப்பேசியினை சாம்சுங் ஸ்டோர்களிலும், AT&T மொபைல் வலையமைப்பு சேவை நிலையங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.