ரயில் முன் குழந்தையுடன் குதித்த நபரின் அடையாளம் தெரிந்தது: புகைப்படங்களும் வெளியாகின!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
224Shares

நியூயார்க் ரயில் நிலையம் ஒன்றில் கையில் குழந்தையுடன் ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட நபரின் அடையாளம் தெரிந்ததுடன் அவரது புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

நேற்று காலை 8 மணியளவில் Bronx ரயில் நிலையத்திற்கு வந்த ஒருவர், கையில் குழந்தையுடன் திடீரென ஓடும் ரயில்முன் குதித்தார்.

அவரது பெயர் Fernando Balbuena (45) என்றும் அவரது மகளின் பெயர் Ferni என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன் ரயில் முன் குதிப்பதற்கு சற்று முன், Fernando தனது மனைவியான Niurka Caraballoவை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

குட் பை, குழந்தைகளை பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு Fernando அழைப்பை துண்டித்துள்ளார்.

ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்துகொண்ட Carabello, உடனடியாக ரயில் நிலையத்திற்கு ஓடியிருக்கிறார்.

அங்கு சென்றதும்தான் கணவன் குழந்தையுடன் ரயில் முன் குதித்த விடயம் Carabelloவுக்கு தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் ரயில்முன் குதித்தவர்களை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கியவர்களில் ஒருவரான Torres கூறும்போது, ரயிலுக்கடியில் பார்க்கும்போது

இரண்டு உடல்கள் கிடப்பதைக் கண்டதாகவும், திடீரென குழந்தை மட்டும் எழுந்ததாகவும், அவளை தாங்கள் வெளியே அழைக்க, அவள் தவழ்ந்து வர தடுமாறியதும், தானும் Cesar Dominguez என்பவரும் கைகளை நீட்டி அவளை பிடித்து மெதுவாக இழுத்து எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் Fernandoவையும் கையை நீட்டி தொட முயன்றும், அவரை எட்ட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

Carabello வரும்வரையில் Torres குழந்தையுடனேயே இருந்துள்ளார். அவர் வந்ததும், Torresஐ கட்டியணைத்து அவருக்கு நன்றி கூறிவிட்டு, கதறி அழுதாராம் Carabello.

Fernando கெட்டவரல்ல, அந்த கணத்தில் அவர் மனதில் என்ன போய்க்கொண்டிருந்தது என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் அவர் அப்படிப்பட்டவரல்ல, அவர் குழந்தையை மிகவும் நேசித்தார் என்கிறார் Carabello.

எனவே Fernando எதற்காக குழந்தையுடன் குதித்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவேயில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்