துஸ்பிரயோகத்திற்கு வெறும் 3 மாதம் தான் சிறையா? பாதிக்கப்பட்ட பெண் கொந்தளிப்பு

Report Print Vijay Amburore in அமெரிக்கா
138Shares

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Chanel Miller என்கிற 27 வயது இளம்பெண் கடந்த 2015ம் ஆண்டு ஆண் நண்பர்களால் கொடுக்கப்பட்ட ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

அங்கு அதிக மதுபோதையில் இருந்த அவரை, Brock Turner என்கிற நீச்சல் வீரர் பலவந்தமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து, குப்பை தொட்டியின் பின் புறம் நிர்வாணமாக வீசி சென்றிருந்தார்.

இந்த சம்பவமானது மாகாணம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அவமானத்திற்கு பயந்த Chanel Miller, தன்னுடைய பெயரை Emily Doe என மாற்றிக்கொண்டு வருடக்கணக்கில் தலைமறைவாக இருந்துவந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நீச்சல் வீரர் Brock Turner-க்கு 2016ம் ஆண்டு வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே நீதிபதி சிறைத்தண்டனை விதித்தார். ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் குற்றவாளி சிறையிலிருந்து வெளியில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வருடக்கணக்கில் தலைமறைவாக இருந்த Chanel Miller முதன்முறையாக தொலைக்காட்சியில் தோன்றி தனக்கு நேர்ந்தவை குறித்து பேசியுள்ளார். அப்போது குற்றவாளி மூன்று மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்தது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.

சட்டை பாக்கெட்டில் கஞ்சா வைத்திருந்தவர்கள் கூட பல வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார்கள். ஆனால் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு வெறும் மூன்று மாதம் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அவர் (Brock Turner) மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றத்தில், ஒரு குற்றத்திற்கு ஒரு மாதம் என தண்டனை கொடுத்துள்ளார்கள். "கற்பழிப்பு என்பது குடிபோதையில் இருப்பதற்கான தண்டனை அல்ல" என விமர்சித்துள்ளார்.

சம்பவம் நடந்த மறுநாள் காலையில் மேல் ஆடையை தவிர உடலில் எந்த துணியும் இல்லாமல், குப்பை தொட்டிக்கு பின் புறமாக நான் கிடந்தேன். சுவிஸ் பட்டதாரி மாணவர்களான பீட்டர் ஜான்சன் மற்றும் கார்ல் அர்ன்ட் ஆகியோர் தான் மயக்க நிலையில் இருந்த என்னை மருத்துவனையில் சேர்த்து உதவி செய்தார்கள் என அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனக்கு நடந்த கொடுமைகளை, 'Know My Name' என்கிற பெயரில் புத்தகமாக இன்று வெளியிடுகிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்