திடீரென பெண்ணின் உடலில் ஊதா நிறமாக மாறிய இரத்தம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

பல்வலிக்காக மருந்து எடுத்துக்கொண்ட பெண் ஒருவரின் இரத்தம் முழுவதும் ஊதா நிறமாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர், பல் வலிக்கு நிவாரணியாக பென்சோகைன் நிரப்பப்பட்ட ஒரு மருந்தை பயன்படுத்தியுள்ளார்.

இரவு உறங்குவதற்கு முன்னர் கிட்டத்தட்ட முழு பாட்டிலையும் பயன்படுத்தியுள்ளார். மறுநாள் காலையில் அவர் விழித்தபோது உடல்நிலை சரியில்லாமல், பலவீனமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.

அவருடைய தோல் மற்றும் நகங்கள் நீல நிறமாகா மாறியிருந்தது. ஏனெனில் அவருடைய உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருந்ததாக சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறினர்.

சராசரியாக மனிதனுக்கு 95 முதல் 100 சதவீதம் ஆக்சிஜன் அளவு இருக்க வேண்டும். ஆனால் அந்த பெண்ணுக்கு 67 சதவீதம் மட்டுமே இருந்ததாக பரிசோதனைகள் வெளிப்படுத்தின.

ஹைபோக்ஸீமியா எனப்படும் மிகக் குறைந்த இரத்த ஆக்ஸிஜன் அளவு, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணம் அல்லது நிரந்தர மூளை பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சம்மந்தப்பட்ட பெண் பல் மருத்துவரின் பரிந்துரையுடன் ஒரு இரவு முழுவதும் மருத்துவமனையில் கழித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்