அம்மாவை பார்க்க சென்ற போது திடீரென கோடீஸ்வரராக ஆன நபர்! எப்படி தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் அம்மாவை பார்க்க சென்ற போது வழியில் லொட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு $500,000 பரிசு விழுந்துள்ளது.

மிச்சிகனை சேர்ந்த 46 வயதான நபர் மிலான் நகரில் வசிக்கும் தனது தாயை பார்க்க காரில் சென்றார்.

அப்போது வழியில் காருக்கு எரிபொருள் நிரப்பிய அவர் அங்கு லொட்டரி விற்பனை நடைபெறுவதை பார்த்து யதேச்சியாக லொட்டரி சீட்டுகள் வாங்கினார்.

அவர் வாங்கிய சீட்டுக்கு பம்பர் பரிசாக $500,000 விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு லொட்டரி சீட்டுகளை அதிகம் வாங்கும் பழக்கம் இல்லை, திடீரென வாங்கவேண்டும் என தோன்றியதால் வாங்கினே.

அதில் இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என நினைக்கவில்லை, இன்னும் கூட என்னால் இதை நம்பவில்லை.

பரிசு பணத்தை வைத்து புதிய கார் வாங்குவேன், எனக்கு இருந்த நிதி நெருக்கடியை இந்த பரிசு தொகை தீர்த்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்