22 வருடங்களுக்கு பின் கூகுள் மேப்பில் சிக்கிய நபர்... ஏரியில் உடல் எச்சங்கள் மீட்பு - வியப்பில் குடும்பத்தார்! 

Report Print Abisha in அமெரிக்கா

1997 ஆம் ஆண்டு காணாமல் போன வில்லியம் என்ற நபரை ஏரியில் உடலின் எச்சங்களாக மீட்கப்பட்ட சம்பவம் புளோரிடாவில் நடந்துள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று புளோரிடாவின் லான்டனாவில் வில்லியம் மோல்ட் என்ற இந்நபர் காணாமல் போனார்.

அந்த காலகட்டத்தில் 40 வயதான இவர், ஓர் இரவு விடுதிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பவில்லையாம்.

அப்போது அவரை காணவில்லை என்று பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.

சிறிது காலம் தேடிய பொலிசார் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அப்படியே நிறுத்தி வைத்துள்ளனர்.

22 ஆண்டுகளுக்கு பிறகு, 2019 ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் திகதியன்று வெலிங்டன் பகுதியில் ஓர் ஏரி அருகே நீரில் மூழ்கிய கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

நீரில் இருந்து அந்த காரை மீட்டெடுத்த பின்னர், அதன் உள்ளே மனித எலும்புகூடு இருந்தது கண்டறியப்பட்டது.

GOOGLE

இந்த பகுதியில் முன்னர் வசித்த ஒருவர், கூகுள் மேப்ஸ் மூலம் வில்லியமின் நீரில் மூழ்கிய காரை கண்டறிந்ததாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின் தன் நண்பனின் உதவியுடன் ட்ரோன் கமெராவை கொண்டு பார்த்துள்ளார். அந்த பகுதியில் கார் ஒன்று இருந்துள்ளது.

GOOGLE

அதன்பின்னர், துரித நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் காரை மீட்டு உடல் எச்சங்களையும் மீட்டுள்ளனர். வில்லியமின் குடும்பத்துக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இரவு 9.30 மணிக்கு, தனது பெண் தோழியை போனில் அழைத்து விரைவாக வீடு திரும்புகிறேன் என்று கூறிய வில்லியம் 22 ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் மேப்ஸ் மூலம் உடல் எச்சங்களாக கண்டறியப்பட்டுள்ளது குடும்பத்தினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

NATIONAL MISSING AND UNIDENTIFIED PIC

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...