ஓடுபாதை என நினைத்து.. நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்கிய விமானி: காருடன் மோதி பயங்கர விபத்து

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maryland, Bowie-யில் விமான நிலையத்திற்கு அருகே உள்ள Route 50 நெடுஞ்சாலையிலே இவ்விபத்து நடந்துள்ளது.

அருகில் இருந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், தரையிறங்கும் போது விமானியின் தவறான கணிப்பால் துரதிஷ்டவசமாக இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

திடீரென நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பயங்கரமாக சேதமடைந்த காரில் பயணித்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தை அடுத்து Route 50 நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்து இருவர், விமானத்தில் பயணித்த இருவர் என நான்கு பேர் காயங்களுடன் உயிர்தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிய ரக விமானத்தின் உரிமையாளர் Derrick Early என கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவர் விமானத்தில் பயணிக்கவில்லை. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்டுப்புக் குழுவினர், நெடுஞ்சாலை மூடி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

(Image: WTOP)

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்