அமெரிக்க ஜோடிக்கு பிறந்த ஆசிய மகள்.. டி.என்.ஏ பரிசோதனையில் நிரூபனமான தவறு

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோடிக்கு ஆசிய மகள் பிறந்துள்ள சம்பவத்தின் நீதிமன்ற விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த Drew Wasilewski-யும் அவரது முன்னாள் மனைவி Kristina Koedderich-யும் ஆசிய மகளை பெற்றெடுத்த பிறகு திகைத்துப் போயுள்ளனர்.

டி.என்.ஏ பரிசோதனையில் Wasilewski குழந்தையின் உயிரியல் தந்தை அல்ல என்பதை நிரூபனமான பின்னர், கருத்தரித்தல் மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.

IVF எனப்படும் கருத்தரித்தல் வழியாகச் குழந்தை பெற்றெடுத்த Drew Wasilewski-Koedderich ஜோடி, தங்கள் மகள் பிறந்த பல வருடங்களுக்குப் பிறகு அவருக்கு ஆசிய அம்சங்கள் இருப்பதைக் கவனித்ததாகக் கூறுகின்றனர்.

அவர்கள் தொடுத்த வழக்குப்படி, 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் 49 வயதான Wasilewski குழந்தையின் தந்தை என்று 0 சதவீதம் சாத்தியம் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

(Image: Facebook)

நீதிமன்ற ஆவணங்களின் படி, தங்கள் குழந்தைக்கு தென்கிழக்கு ஆசிய பாரம்பரியத்துடன் தொடர்புடைய இரத்தக் கோளாறு இருப்பதைக் பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இப்போது விவாகரத்து பெற்ற இந்த ஜோடி, 2012 ல் செயிண்ட் பர்னாபாஸில் உள்ள கருத்தரித்தல் மருத்துவம் மற்றும் அறிவியலில் சிகிச்சைக்காக 5,00,000 டாலர் செலவிட்டுள்ளது.

மருத்தவமனையின் கவனக்குறைவு தங்களது திருமணத்தை முறித்துக் கொண்டதற்கான முக்கிய காரணம் என தம்பதியினர் கூறுகின்றனர்.

வழக்கு தொடர்பாக கடந்த மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையில், அந்த நேரத்தில் விந்தணு தானம் செய்த ஆண்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு மருத்துவமனைககு உயர் நீதிமன்ற நீதிபதி கீத் லினோட் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்