18 வது நினைவு நாளில் இரட்டை கோபுர தாக்குதல்! தற்போது பீனிக்ஸ் பறவை போல் புதிய தோற்றம்

Report Print Abisha in அமெரிக்கா

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உலகமே அமெரிக்காவை திரும்பி பார்த்து வருத்தம் அடைந்தது.

நியூயார்க்கில் கம்பீரமாக இருந்த இரட்டை கோபுரங்கள், அல்-குவைதா தீவிரவாதிகள் விமானகள் மூலம் மோத செய்து தரைமட்டமாக்கினர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர்11-ம் திகதி காலை 8:46 மணிக்கு அல்-குவைதா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 19 பேர் அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு பயணிகள் விமானங்களை கடத்தி சென்றனர். பின்னர் முதலிரண்டு விமானங்களை தாழ்வாக பறக்க வைத்து நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோத செய்தனர்.

மோதிய இரண்டு மணிநேரத்திற்குள் 110 மாடிகள் கொண்ட இரண்டு கட்டிடங்களும் தரைமட்டமாகியது. அருகில் இருந்த பல கட்டிடங்கள் இதில் பலத்த சேதம் அடைந்தன. அதில் விமானத்தில் இருந்த 147பேரும், கட்டிடத்தில் இருந்த 2,606 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்துள்ளனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

நான்காவது விமானம், சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இச்சம்பவத்தில் 40 பேர் பலியாகினார்கள்.

உலகம் முழுவதும் அதிவை ஏற்படுத்திய இந்த சம்பவம், அந்நாட்களில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு பின்லேடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

பின் 9ஆண்டுகளுகளுக்கு பின் பழிக்கு பழிவாங்கும் விதமாக நடந்த தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் 2011-ம் ஆண்டு மே 2-ம் திகதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்த இடத்தில் 'பீனிக்ஸ்' பறவை போல புதிதாக வர்த்தக மைய கட்டடம் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் திகதி திறக்கப்பட்டது.

இச்சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமாக 'நேஷனல் செப்டம்பர் 11 மெமோரியல் அண்ட் மியூசியம்' பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் நினைவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்