பேய் வீட்டை வாங்கிய தம்பதி: நள்ளிரவில் கேட்கும் அமானுஷ்ய சத்தங்கள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் வீடு ஒன்றை வாங்கியுள்ள ஒரு தம்பதி, தினமும் தங்கள் வீட்டுக்குள் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக தெரிவிக்கிறார்கள்.

Cory Heinzenம் அவரது மனைவி Jenniferம் பேய்ப்படங்களில் வருவது போன்று காட்சியளிக்கும் வீடு ஒன்றை Rhode Island என்ற இடத்தில் வாங்கினார்கள்.

283 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டது அந்த வீடு.

இரவு இரண்டு மணிக்கு அந்த வீட்டுக்குள் துப்பாக்கி சுடுவது, பீரங்கி வெடிப்பது, யாரோ அலறுவது போன்ற சத்தம் கேட்பதாகவும், சென்று பார்த்தால் எதையும் காணமுடிவதில்லை என்றும் கூறுகிறார் Heinzen.

அந்த வீட்டுக்கு தனது மனைவியும் மகனும் குடிபெயர்வதற்கு முன், தான் மட்டும் அந்த வீட்டில் தங்கியதாகவும், தன்னால் தனியாக அங்கு தங்குவது கடினம் என்பதை உணர்ந்ததாகவும் தெரிவிக்கிறார் Heinzen.

அத்துடன் கருப்பாக மேகம் போன்ற உருவங்கள் அங்குமிங்கும் நடமாடுவதாகவும், யாரோ படியில் ஏறி வரும் சத்தம், அமானுஷ்ய குரல்கள், கதவை யாரோ தட்டுவது, மட்டுமின்றி, விளக்கே இல்லாத அறையில் ஒளி மின்னிடுவது என என்னென்னவோ விடயங்கள் அந்த வீட்டில் நடக்கின்றனவாம்.

சில விடயங்களை தன்னால் விவரிக்க முடியவில்லை என்று கூறும் Heinzen, உதாரணத்திற்கு, சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் படங்கள் கீழே தானாகவே விழுவதாகவும், ஆனால் அது கீழே விழும்போது சரிந்து விழாமல்சரியாக செங்குத்தாக நிற்பதாகவும் தெரிவிக்கிறார்.

இது எங்கள் வீட்டில் தினமும் நடக்கிறது என்கிறார் Heinzen.

இதற்கிடையில், Bathsheba Sherman என்னும் ஒரு ஆவி, அந்த வீட்டில் யாரும் வாழக்கூடாது என அதை சபித்துவிட்டதாகவும், அதனால்தான் இப்படியெல்லாம் நடப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்