30 ஆண்டுகளுக்கும் மேலாக தடை செய்யப்பட்ட ஏவுகணை சோதனை: அமெரிக்காவால் அதிர்ச்சியில் உலக நாடுகள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

ரஷ்யாவுடனான பனிப்போர் கால ஒப்பந்தத்தின் கீழ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடைசெய்யப்பட்ட நடுத்தர அளவிலான தரைவழி ஏவுகணையை அமெரிக்கா மீண்டும் சோதனை செய்துள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ரஷ்யா Burevestnik எனப்படும் doomsday ஏவுகணையை செவரோட்வின்ஸ்க் என்ற நகரத்தில் இருந்து சோதனை செய்து பார்த்தது.

இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரையில் அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள சான் நிக்கோலா தீவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தரை வழி ஏவுகணை ஏவப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த இடத்திலிருந்து 500 கி.மீ.க்கு மேல் பறந்த பின்னர் ஏவுகணை அதன் இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஏவுகணை ஒரு வழக்கமானதாக கட்டமைக்கப்பட்டாலும், அணுசக்தி பொருத்தப்பட்டது அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையால் ஆயுதப் போட்டி மீண்டும் தொடங்கி அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டங்களை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தைத் மற்ற நாடுகளிடையே தூண்டியுள்ளது.

இந்த ஏவுகணை சுமார் 1,000 கி.மீ (620 மைல்) தூரத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்றும், 18 மாதங்களுக்குள் அது பயன்படுத்த தயாராக இருக்கக்கூடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தனர்.

இந்த ஏவுகணை சோதனை 1987 இன் இடைநிலை தூர அணுசக்தி (ஐ.என்.எஃப்) ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இந்த மைல்கல் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மற்றும் சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.

இது 500 கிமீ (310 மைல்) முதல் 5,500 கிமீ (3,410 மைல்) வரையிலான அனைத்து ஏவுகணைகளையும் தடை செய்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அச்சுறுத்தலில் ஆழ்த்திய சோவியத் யூனியனால் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை அணு ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியாக, 500 முதல் 5,500 கி.மீ வரை பயணிக்கக்கூடிய அனைத்து நில அடிப்படையிலான ஏவுகணைகளையும் ஐ.என்.எஃப் அப்போது தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்