தற்கொலைக்கு முன் உயில்: கோடீஸ்வரர் எப்ஸ்டீனின் தீவு உள்ளிட்ட பல மில்லியன் சொத்துகள் யாருக்கு: வெளியானது முக்கிய தகவல்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்கா சிறையில் தற்கொலை செய்துக்கொண்ட கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உயில் எழுதியுள்ளார், அதில், தனது 578 மில்லியன் டாலர் சொத்துக்களை பெயரிடப்படாத பயனாளிகளுடன் ஒரு அறக்கட்டளைக்கு எழுதிவைத்தார் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக பல அரசியல்வாதிகள் மற்றும் பிரித்தானியா இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பல பிரபலங்களுடன் நட்புறவு கொண்ட ஒரு பணக்கார நிதி மேலாளரான எப்ஸ்டீன், ஆகத்து 10-ம் திகதி அன்று பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்காக சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆகத்து 8-ம் திகதி, தனக்கு சொந்தமான விர்ஜின் தீவுகளில் தாக்கல் செய்யப்பட்ட கடைசி உயிலிலும், சாட்சியத்திலும் அவர் கையெழுத்திட்டார், அதன் மூலம் தனது சொத்துகளை "1953 அறக்கட்டளை" க்கு மாற்றினார்.

தன்னிடம் 56.5 மில்லியனுக்கும் அதிகமான பணம், 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான பங்கு மற்றும் 14 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிலையான வருமானம் இருப்பதாக எப்ஸ்டீன் கூறியதாக இணையத்தில் உயிலின் நகலை வெளியிடப்பட்டது.

நியூயார்க், புளோரிடா மற்றும் பாரிஸில் உள்ள ஆறு சொகுசு சொத்துக்களையும், 18 மில்லியன் டாலருக்கும் அதிகமான விமான சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் படகுகள் இருப்பதையும் எப்ஸ்டீன் பட்டியலிட்டுள்ளார்.

பட்டியலிடப்பட்ட எந்த பயனாளிகளையும் இந்த ஆவணம் குறிப்பிடவில்லை. இந்த நடவடிக்கை எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரது சொத்தின் மீது வழக்குத் தொடுப்பது மிகவும் கடினம் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பல பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இழப்பீடு கோரி வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். 14 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக கடத்தியதாக எப்ஸ்டீன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார், ஆனால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 45 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி இருந்திருக்கும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்