கிரீன்லாந்தில் டிரம்ப்பின் தங்க கோபுரம்: நாட்டையே விலைக்கு வாங்கும் சதிதிட்டம் அம்பலம்

Report Print Basu in அமெரிக்கா

கிரீன்லாந்தில் டிரம்ப் என்ற பெயரில் தங்க கோபுரம் இருக்கும் போலி படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்வீட் செய்து தீவு வாங்க திட்டமிட்டுள்ளதை வெளிபடுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தில் ஒரு பெரிய டிரம்ப் கோபுரத்தின் போட்டோஷாப் செய்யப்பட்ட போலி படத்தை ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க மூத்த அதிகாரிகளுடன் டென்மார்க்கிலிருந்து தீவை வாங்குவதற்கான சாத்தியம் குறித்து பேசிய பின்னர் டிரம்ப் இந்த ட்வீட்டை வெளியிட்டார்

ஆர்க்டிக் தேசத்தை வாங்குவதற்கான தனது சதி குறித்து அரசியல்வாதிகள் வெளிப்படுத்திய சீற்றத்தை குறிப்பிடும் வகையில் டிரம்பின் ட்வீட் அமைந்துள்ளது. அதில், 'கிரீன்லாந்திற்கு இதைச் செய்ய மாட்டேன் என்று நான் சத்தியம் செய்கிறேன்!' என்ற தலைப்பில் ட்வீட் செய்துள்ளார்.

கிரீன்லாந்தை வாங்குவதற்கான டொனால்ட் டிரம்பின் யோசனை 'அபத்தமானது' என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் விவரித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: இது ஒரு அபத்தமான விவாதம், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று கிரீன்லாந்தின் பிரதமர் கிம் கீல்சன் உறுதியாக தெளிவுபடுத்தியுள்ளார், அத்துடன் இந்த உரையாடல் முடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்