கர்ப்பமாக இருக்கும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல மொடல்... எதற்காக தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி ஒருவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, அதில் அவர் எழுதியிருந்த வார்த்தை பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மொடலான Ashley Graham-க்கிற்கு சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் Justin Ervin என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த அழகான ஜோடிக்கு குழந்தை பிறக்கவுள்ளது. அதாவது சில தினங்களுக்கு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி என்று Ashley Graham தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி, கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தார்.

அதில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இன்று, நான் என் வாழ்க்கையின் அன்பை(கணவரை) மணந்தேன். உலகில் எனக்கு பிடித்த நபருடன் இது சிறந்த பயணமாக இருந்துள்ளது.

இன்று, எங்கள் வளரும் குடும்பத்துடன் கொண்டாட மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட, நன்றியுள்ள மற்றும் உற்சாகமாக உணர்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் Ashley Graham சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், ஆடை எதுவும் இல்லாமல், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் வரித் தழும்பை (அதாவது ஒரே உடல் தான் ஆனால் சிறிய மாற்றம்) என்று குறிப்பிட்டு காண்பித்துள்ளார்.

நிர்வாண புகைப்படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்....

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதில் ஒரு இணையவாசி இதற்காக உங்களை வணங்குகிறேன் என்றும், மற்றொரு இணையவாசி இது தான் அழகும், யதார்த்தமும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்