சிறுநீரக கற்களால் வலி ஏற்படுவதாக எண்ணி மருத்துவமனைக்கு சென்ற பெண்: காத்திருந்த மூன்று ஆச்சரியங்கள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இடுப்பு வலி வரவே, தனக்கு இருந்த சிறுநீரகக் கற்கள்தான் அதற்கு காரணம் என்று எண்ணி மருத்துவமனைக்கு சென்றார்.

சிறுநீரகக் கற்களுக்கு சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என எதிர்பார்த்து மருத்துவமனைக்குச் சென்ற தென் டகோட்டாவைச் சேர்ந்த Dannette Giltzக்கு தான் கர்ப்பமாக இருப்பதாக தெரியவர அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

மசக்கை உட்பட என்ற அறிகுறிகளும் தோன்றாத நிலையில், அவரது கர்ப்பத்தில் மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவர ஆச்சரியத்தில் உறைந்தார் Dannette.

தனக்கு சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்று எண்ணிச் சென்ற Dannetteக்கு அறுவை சிகிச்சை மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தன.

ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையின் தான் கர்ப்பமுற்றது தெரியாமலே இருந்திருக்கிறார் Dannette.

Dannetteம் அவரது கணவர் Austinம் தங்கள் குழந்தைகளுக்கு Blaze, Gypsy மற்றும் Nikki என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்