15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டி இளைஞர்: நெகிழ வைக்கும் காரணம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 15 வருடங்கள் ஆசையாக வளர்த்த முடியினை அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளைஞர் தானமாக கொடுத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ரெனால்டோ அரோயோ (23) என்கிற இளைஞர் கடந்த 15 வருடங்கள் ஆசையாக முடி வளர்த்து வந்துள்ளார்.

வியாழக்கிழமைன்று இராணுவத்தில் காலாட்படை பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அதில் முக்கிய விதியாக, வீரர்களின் முடி காது மற்றும் புருவத்தை தொடக்கூடாது என்பதாகும்.

தான் வளர்த்த முடியின் மீது அதிக ஆசை இருந்தாலும், இராணுவத்தில் சேர்வதற்காக அதனை எடுப்பதற்கு ரெனால்டோ முடிவு செய்தார்.

அதன்படி ரெனால்டோ தன் தலைமுடியை 'லாக்ஸ் ஆஃப் லவ்' என்ற நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார். இந்த நிறுவனம் முடி நன்கொடைகளை வைத்து புற்றுநோய் சிகிச்சைகள் அல்லது அலோபீசியா அரேட்டா எனப்படும் திடீர் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் ஒரு ஆட்டோ இம்யூன் நோயிலிருந்து முடி உதிர்தலை அனுபவிக்கும் குழந்தைகளுக்கு விக் செய்கிறது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரெனால்டோ அதிர்ஷ்டமுள்ள சிறுமிகள் என் தலைமுடியினை பெறுவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்