பாகிஸ்தானிய பெண் கேட்ட திடீர் கேள்வி.. அசத்தலாக பதிலளித்த பிரியங்கா சோப்ரா! வைரல் வீடியோ

Report Print Kabilan in அமெரிக்கா

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு, நடிகை பிரியங்கா சோப்ரா பதில் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார்.

அப்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த பாகிஸ்தானிய பெண் ஒருவர், திடீர் கேள்வியை பிரியங்காவை நோக்கி கேட்டார். அதாவது, ‘யுனிசெப், நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை ஆதரிக்கலாமா? உங்களையும், உங்கள் படங்களையும் பாகிஸ்தானில் ரசிக்கிறோம்.

ஆனால், நீங்கள் அணு ஆயுத போருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள்? இது சரிதானா?. நீங்கள் கபட நாடகம் ஆடுகிறீர்கள்’ என்று கோபமாக கேட்டார். அதற்கு பொறுமையாக பதிலளித்த பிரியங்கா சோப்ரா,

‘எனக்கு பாகிஸ்தானில் அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். நான் போரை தூண்டக்கூடியவள் இல்லை. ஆனால் எனக்கு தேசபக்தி இருக்கிறது. இதற்காக என்னை நேசித்த, நேசித்துக் கொண்டிருப்பவர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன். இதற்காக கூச்சல் போட வேண்டாம்.

நாம் அன்பு செலுத்தவே இங்கு இருக்கிறோம். உங்களையே வருத்திக்கொள்ள வேண்டாம். இருந்தாலும் உங்கள் உற்சாகத்திற்கும் இப்படியொரு கேள்வியை கேட்டதற்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்