பொதுவெளியில் மனைவி மெலனியாவை இழிவான சைகையால் அழைத்த டிரம்ப் : கோபத்தை தூண்டிய காட்சி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியாவை பொதுவெளியில் அழைத்த விதம் அந்நாட்டு மக்களிடையே கோபத்தை கிளப்பியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் ஓஹியோவின் டேட்டனுக்கு சென்று கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

ஆனால் இருவருக்கும் இடையிலான ஒரு மோசமான நிகழ்வு சமூக ஊடகங்களில் கோபத்தை தூண்டியது, நெட்டிசன்கள் டிரம்பின் இழிவான சைகையால் ஆத்திரமடைந்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோவில், அமெரிக்க ஜனாதிபதி ஒரு காருக்கு வெளியே நிற்பதைக் காணலாம். பின்னர் அவர் தனது வலதுபுறம் திரும்பி, காலில் தட்டத் தொடங்குகிறார்.

டிரம்பின் சைகையை அறிவுறுத்தலாக எடுத்துக்கொண்ட மெலினா, உடனே அவரின் பார்வைக்கு வந்தார். இறுதியில் இருவரும் ஒன்றாக செல்கின்றனர். இந்த வீடியோவை கண்ட பலர் டிரம்ப் மனைவியை ஒரு நாய் போல அழைத்ததாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்