டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு..? பீதியில் கதறிய ஓடிய மக்களால் பரபரப்பு: அடுத்த நடந்த வினோதம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள உலக புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்பதாக மக்கள் பீதியடைந்து கதறிய ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் ஒஹியோ மாகாணங்களில் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, நாட்டில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள உலக புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் என்றழைக்கப்படும் பரபரப்பான ஸ்டம்ஸ் சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலான பீதி ஏற்பட்டது, துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்பதாக சிலர் ஓட தொடங்க, அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓட தொடங்கியுள்ளனர்.

பலர் அவசர உதவி எண்ணான 911 அழைப்பு விடுத்து டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் என பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக நியூயார்க் பொலிசார் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இருசக்கர வாகனத்தின் இயந்திரத்தில் இருந்து வந்த சத்தத்தை தவறாக நினைத்த மக்கள் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் என பீதியடைந்து ஓடியுள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் இருந்து வந்த சத்தத்தை துப்பாக்கிச் சூடு என மக்கள் கருதியதால் தாக்குதல் பீதி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்த பகுதி வழியாக பயணிக்கும் இருசக்கர வாகனக் குழுவின் ஒரு பகுதியாக இந்த வாகனம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, ஒஹியோ மற்றும் டெக்சாஸில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு காரணமாக, அப்பகுதியில் உள்ள பல மக்கள் மற்றொரு தாக்குதல் என்று நினைத்து பீதியடைந்தனர்.

இதானல், ஏற்பட்ட நெரிசலின் போது பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை வெளியாகவில்லை, ஆனால், யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அளவிற்கு காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்