அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..! புகைப்படம் கசிந்ததால் பொலிசார் சிக்கினர்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பினத்தவரை கைது செய்த பொலிசார், அவர் கையை கயிற்றால் கட்டி குதிரை மீது அமர்ந்தபடி தெருகளில் இழுத்துச் சென்ற சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிம் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அட்ரியன் பெல், குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவ, அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர், பொலிசாரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெக்சாஸின் கால்வெஸ்டனில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் கோபத்தையும் வெறுப்பையும் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக அரசியல்வாதிகள் கருத்து தெரவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து விளக்கம் அளித்த கால்வெஸ்டன் காவல்துறைத் தலைவர் வெர்னான் ஹேல் கூறியதாவது, இந்த தேவையற்ற சங்கடத்திற்கு நான் முதன்மையாக நீலியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அத்துமீறல் குற்றச்சாட்டின் கீழ் 43 வயதான டொனால்ட் நீலி என்பவரை பொலிசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் பி.பிரோஷ் மற்றும் ஏ.ஸ்மித் ஆவர். நீலி கைது செய்யப்பட்ட நேரத்தில் போக்குவரத்து பிரிவு வாகனம் உடனடியாக கிடைக்கவில்லை என்பதால் அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.

இது ஒரு பயிற்சியளிக்கப்பட்ட நுட்பம் மற்றும் சில சூழ்நிலைகளில் சிறந்த நடைமுறை என்றாலும், எங்கள் அதிகாரிகள் இந்த நிகழ்வில் மோசமான தவறான முடிவை எடுத்துவிட்டனர், கைது செய்யப்பட்ட இடத்தில் போக்குவரத்து பிரிவு வாகனத்திற்காக காத்திருக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன்.

காவல் துறை இப்போது கொள்கையை மாற்றியுள்ளது, எனவே இதுபோன்று மீண்டும் நடக்காது என்று ஹேல் உறுதிப்படுத்தினார். எனினும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்