3 வயது இந்தியச் சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கு: இறுதியில் வளர்ப்பு தந்தைக்கு ஏற்பட்ட கதி

Report Print Arbin Arbin in அமெரிக்கா
395Shares

அமெரிக்காவில் இந்தியச் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் அவரது வளர்ப்புத் தந்தை தனக்கு விதிக்கபட்டிருக்கும் சிறைத் தண்டனையை அனுபவிக்க தொடங்கி இருக்கிறார்.

அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி தனது வளர்ப்பு மகளான 3 வயது ஷெரின் மேத்யூவை (பேச்சுக் குறைபாடுடையவர்) காணவில்லை என்று பொலிசாரிடம் புகார் அளித்தார்.

புகாரை அடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும்,

சில மணிநேரம் கழித்துச் சென்று பார்த்தபோது ஷெரினைக் காணவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெஸ்லி மேத்யூவின் வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சுரங்கப் பாதையில் சிறுமி ஷெரினின் உடலை பொலிசார் கண்டெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து வெஸ்லியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷெரினை துன்புறுத்தியதை அவர் ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கில் முதலில் வெஸ்லி மேத்யூக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறை தண்டனையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த வெஸ்லி, டல்லாஸ் சிறைச் சாலையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டதாக டல்லாஸ் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்