அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய மோசடி.. 150 ஆண்டுகள் சிறை தண்டனையை குறைக்க கோரிக்கை!

Report Print Kabilan in அமெரிக்கா
97Shares

தனக்கு விதிக்கப்பட்ட 150 ஆண்டுகள் சிறை தண்டனையை குறைக்க வேண்டும் என, மோசடி நிதி நிறுவன அதிபர் ஜனாதிபதி டிரம்புக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த பெர்னி மடோப்(81) என்ற முதலீட்டு ஆலோசகர், பல பில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்தார்.

அமெரிக்க வரலாற்றிலேயே இது தான் மிகப்பெரிய மோசடியாக கருதப்படுகிறது. எனவே, பெர்னி மடோப்புக்கு இந்த வழக்கில் 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை விதிக்கப்பட்டது. தற்போது அவர், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள புட்னெர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது 150 ஆண்டுகள் சிறை தண்டனை குறைக்க வலியுறுத்தி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார் பெர்னி மடோப்.

Stephen Chernin/Getty Images/JTA

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்