நம்பிக்கைக்குரியவர் என்று எண்ணிய புகைப்படக்காரர்: மொடலின் குளியலறையில் செய்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
156Shares

பல ஆண்டுகளாக தனக்கு அறிமுகமான, தான் நம்பிக்கைக்குரியவர் என எண்ணிய ஒரு புகைப்படக்காரர், தன்னை நிர்வாணமாக படம் பிடிப்பதற்காக தனது குளியலறையில் கெமரா ஒன்றை மறைத்து வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க மொடல் ஒருவர்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த மொடலாகிய Zoë Klopfer, தனது குளியலறையில் ஒரு மொபைல் சார்ஜர் இருப்பதைக் கண்டு, அதை எடுத்து பரிசோதிக்கும்போது அது ஒரு ரகசிய கெமரா என்பதைக் கண்டுபிடித்துள்ளார்.

அதை சோதித்து பார்க்கும்போது அதின் பின்பகுதியில் ஒரு மெமரி கார்டு இருப்பதைக் கண்டு, அதை கணினியில் பொருத்தி பார்க்கும்போது, அதில் தான் உட்பட 200க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாணக் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

தனக்கு பல ஆண்டுகளாக அறிமுகமான William Franci என்னும் புகைப்படக்காரர் தங்கியிருக்கும் அதே அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு புதிதாக குடியேறியிருக்கிறார் Zoë.

அப்போது அவரது குளியலறையில் லைட் பல்புகளை மாற்றுவதாக கூறி உள்ளே சென்றிருக்கிறார் William.

பின்னர் Zoë குளியலறைக்கு வரும்போது அங்கே மொபைல் சார்ஜர் போன்ற ஒன்று இருப்பதைக் கண்டிருக்கிறார்.

அதில் ஒரு பல்பு மின்னிய வண்ணம் இருக்க, ஒருவேளை அது கெமராவாக இருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அவர் அதை எடுத்து பார்க்கும்போதுதான், அது ஒரு கெமரா என்பது தெரியவர, அதனுள்ளிருந்த மெமரி கார்டில் 271 பைல்கள் இருந்திருக்கின்றன, அவ்வளவும் Zoë உட்பட, குளிக்கும் அல்லது உடைமாற்றும் நிர்வாணப் பெண்கள் இருக்கும் காட்சிகள்! தான் நம்பிக்கைக்குரியவர் என்று எண்ணிய ஒருவர் இப்படி செய்ததால் அதிர்ச்சிக்குள்ளான Zoë, உடனடியாக பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

தன்னைப் போல் மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இதை வெளிப்படையாக தெரியப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார் Zoë.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்