இந்தியாவுடனான நட்புறவில் டிரம்ப் தவறிழைத்துவிட்டார்! குற்றம்சாட்டும் பிரபல அமெரிக்க பத்திரிகை

Report Print Kabilan in அமெரிக்கா
32Shares

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தெரிவித்த கருத்து மூலம் டிரம்ப் தவறிழைத்துவிட்டதாக, அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில், காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண உதவி செய்ய வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இந்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது. மோடி அப்படி ஒரு கோரிக்கை எதையும் டிரம்பிடம் விடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் இவ்விவகாரம் தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘ராஜீய ரீதியில் டிரம்ப் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார். இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்ட பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தவறிழைத்துவிட்டார். சீனாவின் எழுச்சிக்கு பதிலடி கொடுக்க முக்கியமான நாடான இந்தியாவின் நட்புறவு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது.

Alex Wong/Getty Images

அப்படிப்பட்ட சூழ்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவின் நட்புறவை அமெரிக்கா இழக்க வேண்டியிருக்கும். இந்தியாவுடனான நட்புறவை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா ஆகியோர் பேணி வளர்த்தனர்.

சில அறியா வார்த்தைகள் மூலம், அவர்களது சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்