ஜாகிங் சென்ற பெண் முன் இளைஞர் செய்த ஆபாச செயல்: பின்னர் நடந்த எதிர்பாராத திருப்பம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் காலையில் ஜாகிங் சென்ற ஒரு பெண் முன் இளைஞர் ஒருவர் ஆபாசமான செயல் ஒன்றை செய்ய, அவர் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

உடற்பயிற்சியாளரான Aia, காலையில் ஜாகிங் சென்று கொண்டிருக்கும்போது, எதிரே வந்த ஒரு இளைஞர் ஆபாசமாக, தனது உடல் பகுதி ஒன்றை அவருக்கு காட்டியிருக்கிறார்.

Aia அதை கண்டு கொள்ளாததுபோல் செல்ல, அந்த இளைஞர் அதே மோசமான செயலை மீண்டும் செய்திருக்கிறார்.

அவ்வளவுதான், Aia அந்த இளைஞரைத் துரத்தி பிடித்து கீழே தள்ளிவிட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்க, யாரும் உதவாத நிலையில், தானே அவசர உதவிக்கான தொலைபேசி எண்ணை அழைத்திருக்கிறார்.

ஆனால் அவர் போன் செய்வதற்குள் அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டிருக்கிறார்.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிசார் Aia செய்தது போல் யாரும் செய்ய வேண்டாம் என்று கூறினாலும், துணிச்சலுடன் செயல்பட்டதற்காக அவரை பாராட்டியுள்ளனர்.

6 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட Aia, ஒரு முன்னாள் இஸ்ரேல் ராணுவ வீரர் என்பதை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்