பெற்றோரின் கண்முன்னே 9 வயது சிறுமியை தூக்கி எறிந்த காட்டெருமை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் காட்டெருமை கடுமையாக தாக்கியதில் 9 வயது சிறுமி காயமடைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு நேற்று 50 பேர் கொண்ட குழு பார்வையிடுவதற்காக வருகை தந்திருக்கின்றனர்.

அவர்களில் புளோரிடாவின் ஒடெஸாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி தன்னுடைய பெற்றோருடன் காட்டெருமை ஒன்றினை பார்வையிட்டு கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அந்த காட்டெருமை கடுமையாக சிறுமியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த சிறுமி 5 முதல் 10 அடி உயரம் வரை தூக்கி வீசப்பட்டார்.

இதனை பார்த்து பதறிப்போன சுற்றுலாப்பயணிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் சிறுமி வீடு திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சிறுமியின் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த இணையதளவாசிகள் சிறுமியின் பெற்றோர் அலட்சியமாக இருந்ததாக கடுமையாக சாடி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்