துப்பாக்கியால் சுட்டு பச்சிளம் குழந்தையின் முகத்தை சிதைத்த கொடூர தந்தை: கதறும் தாயார்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மனைவி மீது கொண்ட ஆத்திரத்தால் கணவன் துப்பாக்கியால் சொந்த குழந்தையின் முகத்தில் சுட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிச்சிகன் மாகாணத்தில் மனைவியை தண்டிப்பதாக கருதி மைக்கேல் கிறிஸ்டோபர் கிளான்ஸ் என்பவர் துப்பாக்கியால் மகன் மீது சுட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

32 வயதான மைக்கேல் கிறிஸ்டோபர் சம்பவத்தின்போது தமது குழந்தையின் தலை மீது துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். அவரிடம் இருந்து தமது 2 வயது மகனுடன் காரில் ஏறிய அவர்களை மைக்கேலும் தொடர்ந்து சென்று, துப்பாக்கியால் சுட்டதில், காரின் பின் இருக்கையில் இருந்த குழந்தையின் ஒருபகுதி முகம் சிதைந்துள்ளது.

சம்பவயிடத்தில் இருந்து தப்பிய அவரை பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 6 பிரிவுகளில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தற்போது 27 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த சிறுவன் குடியிருப்புக்கு திரும்பியதாகவும்,

இருப்பினும் மேலும் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகின்றனர்.

இதுவரை 60,000 பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மிகுந்த ஆதரவு அளிப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்