விமானத்தில் வேறொரு பெண்ணை பார்த்த காதலன்: காதலியின் ஆக்ரோஷ நடவடிக்கை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

விமானத்தில் பயணிக்கும்போது வேறொரு பெண்ணைப் பார்த்ததற்காக தனது காதலனை மோசமான வார்த்தைகளால் வசைபாடிய ஒரு பெண், சக பயணிகள் முன்னாலேயே அவரை தனது லாப் டாப்பால் தாக்கவும் செய்தார்.

சமூக ஊடகம் ஒன்றில் வெளியான வீடியோ ஒன்றில், தனது காதலனை மெமோ என்று அழைக்கும் ஒரு பெண், அவர் வேறொரு பெண்ணைப் பார்த்ததாக கூறி அவருடன் சண்டையிடத் தொடங்குகிறார்.

மியாமியிலிருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு செல்லும் அந்த விமானத்தில் இந்த சண்டை நடக்க, குறுக்கிடும் விமான ஊழியர் ஒருவர், அந்த சூழலை அமைதியாக்குவதற்காக அங்கு ஒரு சிறு குழந்தை இருப்பதாக தெரிவிக்கிறார்.

தனது பைகளை எடுத்துக் கொண்டு விமானத்தின் முன் பகுதிக்கு வருமாறு அந்த பெண்ணை அவர் அழைக்க, அந்த பெண்ணோ தனது காதலனை ஒரு அறை விட்டு, தன்னோடு வராவிட்டால் இனி தன்னை எப்போதுமே பார்க்க முடியாது என்று மிரட்டுகிறார்.

எப்படியாவது அந்த ஆணை காப்பாற்ற முடிவு செய்யும் விமான ஊழியர்கள், அவரை முன்னே வருமாறு கூற, அந்த பெண் விட மறுக்கிறார்.

அவர் பின்னால் ஓடும் அந்த பெண், அவரது தலையில் தனது கையிலிருந்த லாப் டாப்பல் அடிப்பதுடன், தொடர்ந்து அவரை அறைந்தவாறே செல்கிறார்.

விமானத்திலிருந்து அந்த பெண் வெளியேற்றப்படும்போது, அவர் கைது செய்யப்படுவார் என அவரிடம் தெரிவிக்கிறார் விமானத்தின் பைலட்.

அதற்கு, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்கிறார் அந்த பெண்.

நேற்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ சுமார் 30,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்