பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்து சொன்னது குற்றமா? டிரம்ப் மகளுக்கு நேர்ந்த நிலை

Report Print Basu in அமெரிக்கா

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு, ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த இவான்கா டிரம்ப்பை நெட்டிசன்கள் இரக்கமின்றி கேலி செய்து வருகின்றனர்.

37 வயதான அமெரிக்கா ஜனாதிபதியின் மகளான இவான்கா டிரம்ப், ட்விட்டரில் 6.3 ஃபலோவர்ஸை கொண்டுள்ளார். போரிஸிக்கு இவான்கா வெளியிட்ட வாழ்த்து பதிவில், யுனைடெட் கிங்ஸ்டனின் அடுத்த பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டார்.

இவான்காவின் வாழ்த்து பதிவில், துரதிர்ஷ்டவசமாக கிங்டம் என்பதற்கு பதில் கிங்ஸ்டனின் என்று இருந்த எழுத்துப் பிழை கண்ட நெட்டிசன்கள், சமூக ஊடகங்களில் ஏளனம் செய்யத் தொடங்கினர்.

உடனே அப்பதிவை நீக்கிய இவான்கா, எழுத்துப் பிழையை சரிபார்த்து புதிய வாழ்த்து செய்தியை பதிவிட்டார். அதே போல், wales நாடு என்பதற்கு பதில் Whales நாடு என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டர் பதிவில் செய்த எழுத்துப் பிழையும் கேலி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்