அமெரிக்காவில் இந்தியரை கடுமையாக தாக்கிய இளைஞர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

நியூயார்க் மாகாணத்தில் கோவிலுக்கு நடந்து சென்ற இந்திய பூசாரியின் மீது இளைஞர் ஒருவர் சரமாரி தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

நியூயார்க்கின் ஃப்ளோரல் பூங்கா அருகே உள்ள ஒரு கோவிலுக்கு, சுவாமி ஹரிஷ் சந்தர் பூரி காலை நேரத்தில் தன்னுடைய மத உடையில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருடைய பின் பக்கமாக வந்த இளைஞர் திடீரென அவர் மீது கடுமையாக தாக்குதல் நடந்த ஆரம்பித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஹரிஷ் சந்தர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக 52 வயதான செர்ஜியோ என்கிற இளைஞரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலானது, "எங்கள் நாடு சுதந்திரமானது, அழகானது மற்றும் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. நீங்கள் எங்கள் நாட்டை வெறுக்கிறீர்கள் என்றால், அல்லது நீங்கள் இங்கே மகிழ்ச்சியாக இல்லாதிருப்பதை போல் உணர்ந்தால் நீங்கள் வெளியேறலாம்!" என அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மறுநாள் நடைபெற்றுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers