ஈரானின் ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக கூறும் டிரம்ப்.. மறுப்பு தெரிவிக்கும் அமைச்சர்! நடந்தது என்ன?

Report Print Kabilan in அமெரிக்கா

ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்ததை ஈரானின் வெளிவுறவுத் துறை அமைச்சர் மறுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை, ஈரான் சுட்டு வீழ்த்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க கடற்படை கப்பலுக்கு அருகே பறந்து வந்த ஈரானின் ஆளில்லா விமானத்தை, தற்காப்பு நடவடிக்கைக்காக தங்களது கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘எங்கள் வீரர்களையும், அவர்களின் நலன்களையும் பாதுகாக்கும் உரிமையை அமெரிக்கா கொண்டிருக்கிறது. சர்வதேச கடல் பகுதியில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாகவும் செயல்பட்டு வரும் ஈரானுக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானின் வெளியுறுத்துறை அமைச்சர் ஜரீஃப் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தங்கள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers