எல்லை மீறிய ஜோடி, இருவருக்கும் காத்திருந்த செய்தி: வாழ்வே மாறிப்போன சோகம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

காதலியிடம் எல்லை மீறும்போது அவரது உடலில் ஒரு கட்டி இருப்பதை உணர்ந்த காதலன், அது என்னவாக இருக்கும் என கணிக்க, இருவரின் வாழ்வுமே மாறிப்போனது.

Alyssa Dyalம் Sumit Kashyapம் பாஸ்டனில் படிக்கும்போது ஆப் ஒன்றில் சந்தித்து காதலர்களானவர்கள்.

ஒரு நாள் படுக்கையில் சற்று நெருக்கமாக இருக்கும்போது Alyssaவின் மார்பகத்தைத் தொட்ட Kashyap அதிர்ந்து பின் வாங்கியிருக்கிறார். Alyssaவின் மார்பகத்தில் கட்டி ஒன்று இருந்திருக்கிறது.

உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என Kashyap கூற, Alyssaவோ, தன் தாய், சகோதரி இருவருக்கும் இதே போல் கட்டிகள் இருந்ததாகவும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனாலும் Kashyapஇன் வற்புறுத்தலின்பேரில் மருத்துவமனைக்கு சென்ற Alyssaவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அவருக்கு மார்பக புற்றுநோய் வந்து, அது முற்றிய நிலையில் காணப்பட்டுள்ளதை அறிந்த Alyssa அதிர்ந்து போயிருக்கிறார்.

தனது கட்டியை கவனிக்குமாறு வற்புறுத்திய Kashyapக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் Alyssa.

இருவரும் இப்போது காதலர்களாக இல்லை என்றாலும், நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள், இன்னமும் Kashyap தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவுவதாக தெரிவிக்கிறார் Alyssa.

Kashyap மட்டும் வற்புறுத்தவில்லை என்றால், தான் மருத்துவமனைக்கு சென்றிருக்கவே மாட்டேன் என்கிறார் Alyssa.

ஜனவரியில் அறுவை சிகிச்சை மூலம் Alyssaவின் மார்பகம் அகற்றப்பட்டது. அவருக்கு வந்திருக்கும் புற்றுநோய் அபூர்வ வகையானது என்றும், அதிலிருந்து குணமடைய முடியாது என்றும் தெரியவந்துள்ளது.

எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இப்படி என சில நேரங்களில் தனக்கு கோபம் வருவதாக தெரிவித்தாலும், புற்று நோயுடனேதான் மீதி வாழ்வையும் செலவிடப்போகிறேன், இது என்னை தடுத்து நிறுத்தாது என்கிறார் Alyssa.

என்னைச் சுற்றி என்னை நேசிக்கும் இத்தனை பேர் இருப்பதை அறியும்போது, நான் நிச்சயமாகவே அதிர்ஷ்டம் செய்தவள்தான் என்கிறார் Alyssa.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers